நெஞ்சுக்குள் வாழும் இதயமே
நீதானே என்தன் சொந்தம்- அம்மா

பற்றும் பாசமும் கொண்ட உன்னை
சித்தம் இனித்திட நித்தம் நினைத்திடுவோம்

கனிவோடு எமை காக்கும் அன்னை நீயம்மா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எமக்குரைத்த தாயம்மா

நீ இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழவிடு
நான் என்ற அகந்தை விடு நாம் என்று மாறி விடு

கேள்வி தான் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்தென்று
ஏன் எதற்கு எப்படி ...!யார் யாருக்கு எப்போது...!
கேட்டுவிடு உன்னிடமே பார் போற்ற வாழ்ந்திடுவாய்
என்ருரைத்த தாயே உன்பாதம் போற்றி போற்றி!

யாரிந்த மக(ன்/ள்) என்று உலகு கேட்கும் அளவிற்கு
எம்மை உருவாக்கிட எம் உழைப்பவசியம்
கற்றறிந்த கல்வி பெற்ற பல அனுபவம் -கொண்டு
நம்மை மெருகூட்டிட உன் கருணை அவசியம்

இந்த ஞாலத்தில் உன்னை விட பெருமை யாருக்கம்மா
எந்த காலத்திலும் பொன்னைவிட பெருமை யாருக்கம்மா

காசிருந்தால் நினைத்ததை வாங்கலாம் இந்த காலத்தில்-ஆனால்
அன்னை உன்னை எது இருந்தாலும் வாங்கமுடியுமா

உன் பெருமை போற்றிட ஏது வார்த்தை அம்மா
எம் பெருமைக்கு வித்திட்ட உன்னை வாழ்த்த
கோடி வார்தை கூட போதாதம்மா....!

உன் மெளனத்தை
மொழிபெயர்க்க-நான்
சேமித்து வைத்துள்
இரவுகளைத் திருடுகின்றன
உனது நினைவுகள்


மீண்டும் காலையில்
உன் மெளனத்தில்
கயிறு திரிக்கும்
என் எண்ணங்கள்


பேசுகின்ற
உன் கொலுசுச் சத்ததிலேயே
உனக்கான உலாவுக்காகப்
புறப்பட்டுவிட்டது என் மன ரதம்


நீ பேசிக்கொள்ளாத
வார்த்தைச் சமுத்திரத்தில்
மெளன முத்துக்களைக்
கண்டெடுத்து வைத்துள்ளேன்!


உன் உதட்டு மொட்டுக்களின்
பூத்தலுக்காக
காத்துக்கிடக்கும் மனவண்டு…


என் ஞாபகப் புரவி
பார்க்குமிடமெல்லாம்
பரந்து கிடக்கிறது உன்
மெளனப் புல்வெளி



பூமியில் இருந்து பார்கையில்
அழகாகத் தெரியும் அதே நிலவு தான்
கிட்டப்போய்ப் பார்த்தால் கரடுமுரடய்
கிடக்கிறது என்கிறது...
விஞ்ஞானம்...!
விஞ்ஞானம் சொன்ன...அதே
நிலவைத்தான்
சற்கரை நிலவு
தங்கநிலவு
வெள்ளிநிலவு
வட்டநிலவு
வண்ணநிலவு என்கிறது... கவிதை...!