தினமும்
புதிய காலைகளை
எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது
பழைய நினைவுகளுடன்..
இன்றைக்கும் மழை
உன்னிடம்
என் பிரியத்தை சொன்ன அன்றைக்கு
பொழிந்ததைப்போலவே பொழிகிறது.
மழையிடம் மாறுதல்கள் கிடையாது..
இலையின் முதுகில்
ஒழிந்திருக்கும்
பனித்துளியைப்போலப்
பதுங்கிக் கிடக்கிறது
என் துயரம்
சூரியனால் எடுத்துச்செல்ல முடியாதபடி..
இன்றைய மழை நாட்களில் ஒறு நிஜம்.
சிறு கற்பனைகளுடன் இனிமையானது.
பகிர்ந்தது
♥ தயா பாலா ♥
1 பின்னூட்டம்(கள்):
"நந்தலாலா" தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறது!!
நட்புடன்...
"நந்தலாலா" இணைய இதழ்,
nanthalaalaa.blogspot.com
Post a Comment