நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!

தினமும்
புதிய காலைகளை
எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது
பழைய நினைவுகளுடன்..

இன்றைக்கும் மழை
உன்னிடம்
என் பிரியத்தை சொன்ன அன்றைக்கு
பொழிந்ததைப்போலவே பொழிகிறது.
மழையிடம் மாறுதல்கள் கிடையாது..

இலையின் முதுகில்
ஒழிந்திருக்கும்
பனித்துளியைப்போலப்
பதுங்கிக் கிடக்கிறது
என் துயரம்
சூரியனால் எடுத்துச்செல்ல முடியாதபடி..


இன்றைய மழை நாட்களில் ஒறு நிஜம்.
சிறு கற்பனைகளுடன் இனிமையானது.

தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு
வேதம் உயிர் நாதம்
பக்க பலம் நல்ல கல்வி
பெற்ற வரம் கற்ற கரம்
பெரிய வெற்றி அரிய வீரர்
அரிய குணம் தானம் அவதானம்
ஆனால் தமிழா எங்கு ஊனம்
வேண்டா மனம்....!
ஐயம் பயம் பணம் ....!
வேகம் சந்தேகம்!
வாழ்வு உயர நல்ல மனம் ஒன்று போதுமே
என்ன பலன் ஏது பயன் விடுக
பயம் களவு மறைய -சுதந்திர
தாகம் தணிய பாவம் அகல
வறுமை ஒழிய கருணை பொழிய
வரவு உயர பெருமை பெருக
எழுக எழுக எழுக ! தெளிவு பெறுக !
வெற்றி நமதே......! மேன்மை நமதே...!
காலம் தரும் நல்ல வான்பார்த்த பூமி!
அங்கு ஒன்றே குலம்
என்ற பண்பே குணம்
வேறு எங்கே இந்த மரபு
பாரில் வேறு எங்கே இந்த உறவு
அம்மா அப்பா பிள்ளை மாப்பு உறவு
யாரும் ஒன்றே இங்கு...!
தலம் சென்று வலம் வந்த பலன் கிட்ட
கடல் ஓரம் வீசும் காற்று சுகம் கிட்ட
மெல்ல வரும் மழலை கீதம் பொழிய
காதல் கானம் கனிவுடன் கேட்க
பாரும் போற்றிப் புகழ
வாழ்வே வளம் பெறும்
இதுவே நமது உறுதி நியதி
இன்றே வருக நன்றே செய்க
முடிவு நம் கையில் -நமது
விடிவும் நம் கையில்
ஆசைக் கனவு தமிழ் விடுதலை..........!
நீண்ட கனவு!
இனிய தமிழ்!
வாழிய தமிழ்!
வளர்க புகழ் !
அணிக தங்கச்சரம்......!
வாரீர் வாரீர் வாரீர் .......!
எழுந்து வாரீர்