உனக்கு நானோ எனக்கு நீயோ சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா !

தேவைதானா என்று கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா ?
குரங்கிலிருந்து மனிதன் குதித்திருக்க முடியுமா ?
தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா ?
நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா ?
தேவை தான்முட்டைக்குள் இருக்கும் உயிரை மூச்சு விடவைக்கிறது
அனுபவங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது துப்பியது
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே
தமிழன் தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை

வைரமுத்து

2 பின்னூட்டம்(கள்):

// ம் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது துப்பியது
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே
தமிழன் தயாரிக்கப்பட்டான//
நெசமாவே.. வைரமுத்து வைரந்தான் இல்ல?..
..
பிரதீப்
காண்டீபன்
அபர்ணா
மாயா
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

நன்றி ரசிகன்
உங்களுக்கும் எங்களது தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்